10-ற்க்கும் மேற்ப்பட்ட கிழைகள் | மலேசிய உணவுகளின் சிறந்த இடம்

எங்களைப்பற்றி

கொள்கை

ஜோகூர் மாநிலத்தில் சிறந்த உணவகமாக, வாடிக்கையாளர்களின் மிகச்சிறந்த தேர்வாக அமைய வேண்டும் என்பதே எங்களின் கொள்கை


1990-களில் ஒஸ்மான் உணவகம் இனிதே உதயமானது.ஆரம்பகாலத்தில், ஒரு சிறிய 'வாருங்' என்று அழைக்கபடும் சிறிய உணவகமாக ஆரம்பிக்கப்பட்டது.இதன் நிறுவனர் திரு.ஒஸ்மான் அலி முஹமது, தமது ஆரம்பகாலத்தில் சிங்கப்பூர்,கோலாலூம்பூர் மற்றும் ஜோகூரில் மாநிலங்கலில் உணவக துறையில் வேலை பார்த்து வந்தார்.அங்கு தாம் பெற்ற அனுபவங்களை வைத்து குடும்ப உறுப்பிணர்களின் உதவியோடு இன்று ஜோகூர் மாநிலத்தில் உணவகத்துறையில் மாபெறும் சக்தியாக உருவெடுதுள்ளார். அதன் பின்னர்,படிப்படியாக தொழில் நுணுக்கங்களை கற்று கொண்டு,குடும்ப உறவிணர்களின் கூட்டு முயற்சியால் 31-ஆம் திகதி ஆகஸ்டு மாதம் 1997-ஆம் ஆண்டு 'Restoran Selera Bukit Mewah' என்ற (அதிகாரப்பூர்வமான பதிவுபெயருடன் ),தாமான் புகிட் மெவா-வில் ஆரம்பித்தார்.அப்பொழுது அங்கு வேலை பார்த்து வந்த 'construction' உழியர்களுக்கும்,பொது நிகழ்ச்சிகளுக்கும் 'catering' சேவையை தமது வியாபாரத்தில் முக்கிய மய்யமாக செயல்ப்பட்டு வந்தார்.முயற்சியுடையார் இகழ்சியடையார் என்ற பழமொழிக்கேற்ப,ஒஸ்மான் நிறுவனர் திரு.ஒஸ்மான் அலி முஹமது அவர்களின் அயராத உழைப்பாலும்,சீரான நிறுவாகத்தினாலும் இன்றைய திகதியில் மட்டும் மொத்தம் 11 கிழைகளுடன் ஒஸ்மான் உணவகம் வெற்றி நடைபோடுகிறது.ஒஸ்மான் உணவகத்தின் மேற்பார்வை மற்றும் நிறுவாகம் மேலும் வலுப்பெற 11-ஆம் திகதி ஆகஸ்டு மாதம் 2006-ஆம் ஆண்டு,ஒஸ்மான் ஹால்டிங் கம்பெனி உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.